Published : 18,Jan 2017 05:04 PM
தமிழக மக்களின் உணர்வுப்பூர்வமான கோரிக்கையை பிரதமரிடம் எடுத்துரைப்பேன்: முதலமைச்சர்

தமிழக மக்களின் உணர்வுப்பூர்வமான கோரிக்கையை பிரதமரிடம் எடுத்துரைப்பேன் என்று முதலைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்காக சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர் குழுவுடன், தனது இல்லத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களின் கோரிக்கையை கேட்டறிந்த பின்னர் முதலமைச்சர் பன்னீர்செல்வம், பிரதமரைச் சந்திப்பதற்காக டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லி செல்வதற்கு முன்னர் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டுக்காக் அவசர சட்டம் இயற்ற பிரதமரிடம் நேரில் வலியுறுத்த உள்ளதாகத் தெரிவித்தார். தமிழக மக்களின் உணர்வுப்பூர்வமான கோரிக்கையை பிரதமரிடம் எடுத்துரைப்பேன் என்று உறுதியளித்த முதலைமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போராட்டக்காரர்கள் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை அதிமுக எம்பிக்களுடன் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் நாளை காலை சந்திக்க இருக்கிறார்.