தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் மதுரையில் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 15 தென்மாவட்டங்களுக்கு மையப் பகுதியாக விளங்கும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் தென் மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் கேரள மாநில மக்களும் உயர் சிகிச்சை பெறமுடியும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எந்த இடத்தில் அமைக்கப்படும் என்று மத்திய அரசு இதுவரை அறிவிக்காததால் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம் குறித்து அறிவிக்க மத்திய சுகாதாரத்துறை செயலர் மற்றும் எய்ம்ஸ் இயக்குநர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் செல்வம் மற்றும் ஆதிநாதன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் ஜூலை 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Loading More post
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
கருணாநிதி சிலை இருக்கும் வரை வெங்கையா நாயுடுவின் பெயர் வரலாற்றில் இருக்கும் - துரைமுருகன்
’அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை’..கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஒலித்த கேஜிஎஃப் பாடல்!
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?