Published : 21,Jun 2017 09:33 AM

கைதி உடையில் வீடியோவில் தோன்றினார் சசிகலா

Sasikala-appears-in-feera-case-via-video-Conference

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் காணொளிக் காட்சி மூலம் கைதி உடையில் ஆஜரானார் சசிகலா.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து காணொளிக் காட்சி மூலம் ஆஜரான சசிகலாவிடம் சுமார் 50 நிமிடங்கள் கேள்வி எழுப்பப்பட்டது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா, பாஸ்கரன் இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்தனர். சரியாக 12:00 மணிக்கு, நீதிபதி ஜாஹிர் உசேன் முன்னிலையில் ஆஜரான அவரிடம் அந்நியச் செலாவணி மோசடி குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அமலாக்கத்துறை பதிவு செய்திருந்த குற்றச்சாட்டுகளை நீதிபதி படித்துச் சொன்னார். சசிகலா தரப்பில் குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டபோதும், நீதிபதி குற்றச்சாட்டை பதிவு செய்தார். தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அப்லிங்க் வசதி செய்ததிலும், கருவிகளை வாங்கியதிலும் அந்நிய செலாவணி மோசடி நடந்ததாக சசி‌கலா மீது 1996 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு இது. பெங்களூரு சிறையிலிருந்து கைதி உடையில் வீடியோவில் தோன்றினார், சசிகலா

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்