[X] Close

கோலி என்ன கடவுளா? வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

Kumble-Fans-Against-captian-virat-kohli

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே திடீரென ராஜினாமா செய்ததையடுத்து, கும்ப்ளேவின் ரசிகர்கள் கோலிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். 


Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், அனில் கும்ப்ளேவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கும்ப்ளே ராஜினாமாக செய்ததாக தகவல்கள் பரவின. இந்நிலையில், கும்ப்ளேவின் ராஜினாமாவை அடுத்து சமூக வலைதளங்களில் கோலிக்கு எதிராகவும், கும்ப்ளேவுக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
கோலியால் கும்ப்ளே ராஜினாமா செய்த இந்த செயலால்  ஏமாற்றமடைந்துள்ளதாக பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஒரு ரசிகர் தனது வலைத்தளத்தில் விராட் கோலி என்ன இந்திய கிரிக்கெட் அணியின் கடவுளா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். விராட் கோலி அனில் கும்ப்ளேவின் முன் சிறிய குழந்தைதான் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதவிட்டிருந்தனர். 

ஐ.சி.சி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருடன் அனில் கும்ப்ளேவின் பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, வரும் 23-ம் தேதி தொடங்க உள்ள மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரிலும் பயிற்சியாளர் பதவியில் தொடர அனில் கும்ப்ளே-வை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கேட்டிருந்தது. ஆனால் பயிற்சியாளர் பதவியில் தொடர விருப்பமில்லை என தெரிவித்திருந்த அனில் கும்ப்ளே ராஜினாமா செய்தார். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close