Published : 22,Jun 2020 05:08 AM
பயிற்சி ஐஏஎஸ் எனக் கூறி ஊர் சுற்றி வந்த நபர் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி

மதுரையில் பயிற்சி ஐஏஎஸ் எனக்கூறி சொகுசுக் காரில் ஊர் சுற்றிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை கூடல்புதூர் காவல்துறையினர் திண்டுக்கல் மதுரை நெடுஞ்சாலைப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சொகுசு கார் ஒன்றை காவல்துறையினர் சோதனையிட்டனர். அந்தச் சோதனையில் வாகனத்தில் வந்த நபர் இ பாஸ் இல்லாமல் பயணம் செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் விசாரித்தபோது, சொகுசு காரில் வந்த நபர் தன்னை பயிற்சி ஐஏஎஸ் எனக் கூறியதோடு, திருமண பத்திரிகையில் ஐஏஎஸ் ட்ரெயினிங் என அச்சடிக்கப்பட்டதையும் காண்பித்துள்ளார்.
வீரர்களின் உயிர் தியாகத்திற்கு நடவடிக்கை எடுக்காவிடில் அது வரலாற்று துரோகம்: மன்மோகன் சிங்
இருப்பினும் சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர் கொடைக்கானலை சேர்ந்த வேலுமணி என்பதும் பயிற்சி ஐஏஎஸ் எனக்கூறி காரில் பல ஊர்களுக்கு சுற்றியதும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர் பயிற்சி ஐஏஎஸ் இல்லை என்பதை உறுதிப்படுத்திய காவல்துறை அவரை கைது செய்தனர்.