Published : 21,Jun 2017 07:57 AM

இதுவும் யோகா தின நிகழ்வே - ‘சவாசனம்’ செய்த விவசாயிகள்

Farmers-perform-Savasana-in-Madhya-Pradesh

மத்தியப் பிரதேசம், போபாலில் பாரதீய கிசான் யூனியன் அமைப்பைச் சேர்ந்த விவசாயிகள் ‘சவாசனம்’ செய்து விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு எதிராக தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

நாடு முழுவதும் யோகா தினக் கொண்டாட்டங்களும், யோகா விழிப்புணர்வுப் பேரணிகள் நடந்துகொண்டிருக்கும் இதே வேளையில், பாரதீய கிசான் யூனியன் அமைப்பைச் சேர்ந்த விவசாயிகள் ‘சவாசனம்’ (இறந்த உடலைப் போல் கிடப்பது) செய்து, மத்தியப் பிரதேசத்தில் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பத்திற்கு எதிராக தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.

இதில் பங்கேற்ற ராஷ்ட்ரிய கிசான் மஸ்தூர் சங்கதன் என்னும் விவசாய அமைப்பின் தலைவர் ஷிவ் குமார் இதுகுறித்து பேசுகையில், “எங்கள் அஹிம்சைப் போராட்டம் தொடரும். இந்த நாட்டின் எல்லா மூலைகளிலும் ஒடுக்கப்படும் விவசாயிகளின் பரிதாபமான நிலையை நாங்கள் உணர்த்த விரும்புகிறோம். யோகா தினமான இன்று, சவாசனம் செய்து எங்கள் நிலையை இந்த நாட்டுக்கு எடுத்துரைக்கிறோம்” என்றார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்