சீனமொழியில் அச்சிடப்பட்ட ட்ரம் ஒன்று, ரூ.230 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதை பொருட்களுடன் மாமல்லபுரத்தில் கரை ஒதுங்கியது
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ளது கொக்கிலமேடு கடற்கரை. அங்கு சீலிடப்பட்ட தகர ட்ரம் ஒன்று நேற்று கரை ஒதுங்கியது. அங்கிருந்த மீனவர்கள் அதை உடைத்து பார்த்தனர். அதன் உள்ளே 78 பொட்டலங்கள் இருந்தன. இது குறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக கடலோர காவல் படை மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று கரை ஒதுங்கிய ட்ரம்மில் இருந்த 78 பொட்டலங்களை கைப்பற்றினர்.
அந்த பொட்டலத்தின் மேல் ரீபைன்ட் சைனீஸ் டீ என சீன மொழியிலும் ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டு இருந்தது. ஒரு பொட்டலத்தை பிரித்து சோதனை செய்தனர்.
அது போதை பொருளாக இருக்கும் என சந்தேகம் அடைந்த கடலோர காவல் படை போலீசார் 78 பொட்டலங்களையும் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வு பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் அது ஹெராயின் வகையை சேர்ந்த ‘மெத்தாம்பிடைமின்’ என்ற ஒரு வகை போதை பொருள் என்பது தெரிந்தது. 78 கிலோ மதிப்புள்ள இந்த போதை பொருட்களின் சர்வதேச மதிப்பு ரூ.230 கோடி என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த உயர்தர போதை வஸ்து மியாயன்மர் நாட்டிலிருந்து வந்திருக்கலாம் என போதை தடுப்பு பிரிவு தகவல் தெரிவித்துள்ளனர். சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட போதை பொருள் எப்படி கடலில் மிதந்து வந்தது என்ற கோணத்தில் போதை தடுப்பு பிரிவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்
”பள்ளிக்கு நான் தேவையில்லை என்று கூறிவிட்டார்கள்” - இட்லி கடை நடத்தி வரும் தலைமை ஆசிரியர்
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்