ஊரடங்கு காலத்தில் மின்கட்டண மையங்கள் செயல்படாது !

ஊரடங்கு காலத்தில் மின்கட்டண மையங்கள் செயல்படாது !
ஊரடங்கு காலத்தில் மின்கட்டண மையங்கள் செயல்படாது !

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்தும் மையங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் மீண்டும் முழு ஊரடங்கைத் தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.

இந்த முழு ஊரடங்கு நேற்றிலிருந்து ஜூன் 30 ஆம் தேதிவரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, மறைமலைநகர் நகராட்சிகள், நந்திவரம், கூடுவாஞ்சேரி பேரூராட்சிகள், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள 4 மாவட்டங்களிலும் ஜூன் 30 ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தும் மையம் இயங்காது என்று தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தப் பொது முடக்க மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த ஜூலை 15 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com