[X] Close

முதல்வருக்கு கொரோனா வராது; வந்தாலும் சரியாகிவிடும் - செல்லூர் ராஜூ

தமிழ்நாடு

Corona-does-not-come-for-CM---Selur-Raju

முதலமைச்சருக்கு கொரோனா வராது; வந்தாலும் சரியாகிவிடும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 


Advertisement

மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "மதுரையில் எல்லோருடைய கோரிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஆலோசனை செய்து ஊரடங்கு குறித்து முடிவெடுப்பார்கள். மதுரையில் கொரோனா பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

image


Advertisement

வெளி மாவட்டங்களில் இருந்து மதுரைக்கு மக்கள் அதிகமாக வருகின்றனர். எல்லைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு வேண்டும். நோய் வராது என்று தைரியமாக அறிவின்மையால் மக்கள் வெளியே வருகிறார்கள். முதலமைச்சர் பிரதமரிடம் கொரோனா நிதியாக 3000 கோடி கேட்டுள்ளார். தமிழக அரசு மத்திய அரசிடம் தொடர்ந்து நிதியை பெற நடவடிக்கை எடுத்து வருகிறது. 

image

முதல்வருக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஜெயலலிதா இருந்தால் எப்படி கருணையோடும் பாசத்தோடும் இருப்பாரோ அதுபோல எடப்பாடி பழனிசாமி உள்ளார். முதல்வர் எங்களுக்கு வழிகாட்டியாய், முன்மாதிரியாய் உள்ளவர். சக அமைச்சர்கள் மீது அன்பும் பாசமும் கொண்ட முதல்வர், துணை முதல்வர் கிடைத்துள்ளனர். எல்லோரின் ஆசியாலும் முதல்வருக்கு கொரோனாலாம் வராது. வந்தாலும் அது உடனே போய்விடும்.”எனத் தெரிவித்தார்.


Advertisement

image

 


Advertisement

Advertisement
[X] Close