Published : 19,Jun 2020 11:54 AM

போதையில் வீட்டைத் திறந்து போட்டுத் தூங்கிய நபர் : கொள்ளையடித்த திருடர்கள்.!

Drunken-slept-open-door---Robbers-entered-his-house-and-theft-all

மதுரையில் மதுபோதையில் கதவைத் திறந்து வைத்துத் தூங்கிய நபரின் வீட்டில் புகுந்து கொள்ளையர்கள் திருடிச்சென்றனர்.

மதுரை ஜெயந்திபுரம் அடுத்த ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய். மது போதையிலிருந்த இவர் தனது வீட்டைத் திறந்து வைத்துக்கொண்டு உறங்கியுள்ளார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், உள்ளே இருந்த விஜய்யை ரத்த காயம் ஏற்படும் அளவிற்குத் தாக்கியுள்ளனர். பின்னர் அவரது வீட்டிலிருந்த 45 பவுன் தங்க நகை, 40 ஆயிரம் ரொக்கம், டிவி மற்றும் வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

image

கொள்ளையடித்துச் சென்ற பொருட்களுடன் துப்பாக்கி குண்டுகள் இருந்ததால் டிவி மற்றும் துப்பாக்கி குண்டுகளைப் போட்டு விட்டு ஓடியுள்ளனர். இதுதொடர்பாக நேற்று காவல்துறையினர் துப்பாக்கி குண்டுகள் மற்றும் தொலைக்காட்சியைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்த நிலையில், கொள்ளையில் ஈடுபட்டவர்கள் நகை, பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

image

காயமடைந்த விஜய் கொடுத்த புகாரின் பேரில், ஜெயந்திபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஜய்யின் தந்தை துரை அனுமதி பெற்று துப்பாக்கி வைத்திருந்துள்ளார். அவர் இறந்ததால் துப்பாக்கி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், குண்டுகளை ஒப்படைக்காத காரணத்திற்காக விஜய் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சீன விவகாரம் : பிரதமர் தலைமையில் தொடங்கியது அனைத்துக்கட்சிக் கூட்டம்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்