[X] Close

வேலை வாங்கி தருவதாகக் கூறி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஃபேஸ்புக் நண்பர்

Facebook-friend-rapes-girl-at-Delhi

டெல்லி அருகே வேலை வாங்கி தருவதாக கூறி, ஃபேஸ்புக் நண்பர் ஒருவர் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தென் கிழக்கு டெல்லியில் வசித்து வரும் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவருக்கு சமூக வலைதளமான ஃபேஸ்புக் பக்கத்தில் ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. ஃபேஸ்புக் நண்பர் வேலை வாங்கி தருவாகக் கூறி அந்த பெண்ணை அங்குள்ள 5 நட்சத்திர விடுதிக்கு வரவழைத்துள்ளார். இதை நம்பி வேலைக்காக அங்கு சென்ற பெண்ணிற்கு அவர், குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்துள்ளார். பின்னர், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து, அந்தபெண், சாகெட் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண், நீதிபதியின் முன்பு வாக்குமூலம் அளித்த பின்னர் குற்றவாளியை கைது செய்வதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close