[X] Close

ஜிஎஸ்டி வரி விதிப்பு: அதிகரிக்கும் கிரடிட் கார்டு கட்டணம், இன்சூரன்ஸ் பிரீமியம்

Credit-card-bill--insurance-premium-to-get-costlier-under-GST

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டால் கிரடிட் கார்டு கட்டணம் மற்றும் ஆயுள் காப்பீட்டின் பிரீமியம் ஆகியவை அதிகரிக்கும். 

சுதந்திரத்துக்கு பிறகான நாட்டின் மிகப்பெரிய வரிசீர்த்திருத்தமாகக் கருதப்படும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்குகள் மற்றும் சேவை வரிவிதிப்பு முறை நாடு முழுவதும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்பட இருக்கிறது. கிரடிட் கார்டுகள் மற்றும் ஆயுள் காப்பீடு போன்ற சேவைகள் இதுவரை 15 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் இந்த சேவைகளுக்கு 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமலான பின்னர் கிரடிட் கார்டு கட்டணங்கள் மற்றும் ஆயுள் காப்பீட்டு பிரிமியம் ஆகியவை அதிகரிக்கும். இதுதொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கி ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு இதுதொடர்பாக குறுஞ்செய்தி மற்றும் இ-மெயில் மூலமாக தகவல் தெரிவிக்கத் தொடங்கியுள்ளன. 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close