[X] Close

குடியரசுத் தலைவர் தேர்தல்: திமுகவிடம் ஆதரவு கோரிய பாஜக

BJP-asks-support-from-DMK

குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவளிக்கும்படி திமுகவிடம் பாஜக கோரியுள்ளது.


Advertisement

இதுதொடர்பாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேசினார். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக பீகார் மாநில முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். பல்வேறு கட்சிகளிடமும் ராம்நாத்த்துக்கு ஆதரவளிக்க பாஜக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுதொடர்பாக பேசிய வெங்கையா நாயுடு, வரும் 23ல் ராம்நாத் கோவிந்த் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் நிகழ்வுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். பாஜக வேட்பாளருக்கு தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்ட்ர சமிதி மற்றும் சிவசேனா உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளன.  


Advertisement

Advertisement
[X] Close