[X] Close

வீடற்றவர்களுக்கு உணவளிக்க நெட்வொர்க்’ - திரும்பி பார்க்க வைத்த கொல்கத்தா மாணவரின் சேவை

இந்தியா

A-student-led-network-of-volunteers-solves-crises

ஊரடங்கை கண்டு முடங்கிப் போகாமல் தனது சேவையால் தேசத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளார் கொல்கத்தாவைச் சேர்ந்த தாக்கூர் என்ற மாணவர்.


Advertisement

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது. யாரும் அது வரை எதிர்பார்க்காத இந்தப் பொது முடக்கத்தால் நாடே ஸ்தம்பித்துப் போய் தவித்தது. குறிப்பாக புலம்பெயர்ந்த கூலித்தொழிலாளர்கள் அடுத்த வேலை உணவுக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் சிக்கித் தவித்தனர். இந்தப் பொது முடக்க காலத்தில் தனது அர்ப்பணிப்பு மிக்க சேவையால் திரும்பி பார்க்க வைத்துள்ளார் கொல்கத்தாவைச் சேர்ந்த 29 வயதான மாணவர் டெபோஜித் தாக்கூர். ஜெர்மனியில் உள்ள ட்ரையர் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி படித்தவர். மார்ச் மாதம் மாநில எல்லைகள் மூடப்பட்டபோது ஒரு ஆராய்ச்சிக்காக இவர் டெல்லி பயணத்தின் நடுவே சிக்கினார்.

image


Advertisement

ஆனாலும் கவலைக் கொள்ளவில்லை தாக்கூர். சமூக வலைத்தளங்களை பொழுதுப்போக்கு விஷயத்திற்காக மட்டுமே பயன்படுத்தும் பெரும்பாலான இளைஞர்களிடம் இருந்து இவர் வேறுபட்டார். ஒன்றுபட்டு இணைந்து சேவை செய்ய ‘இளைஞர்களே வாருங்கள்’ என அழைப்பு விடுத்தார். முதலில் மார்ச் 29 அன்று இந்த அழைப்பு வெளிட்ட போது பெரிய அளவில் வரவேற்பு இல்லை. வீடற்றவர்களுக்கு உணவளிக்க வர சொல்லி அழைத்தால் யார் வருவார்கள்? .. சிலர் மட்டுமே கூடினார்கள்.

image

ஆனால், சற்றும் எதிர்பார்க்காத விதமாக , அமெரிக்கா, லண்டன், ஜெர்மனி என பலர் இந்தக் குழுவிற்கு உதவ முன்வந்துள்ளனர். அதில் அனைவரும் மாணவர்கள். பலரும் உதவியைப் பணமாக அனுப்பியுள்ளனர். பணம் கொடுக்க முடியாதவர்களுக்கு இந்தச் சேவையை ஒரு செய்தியாக பரப்புங்கள் எனக் கூறியுள்ளார் தாக்கூர். இவரது அழைப்பை ஏற்று சில வாரங்களில், டெல்லி மற்றும் மேற்கு வங்கம் முழுவதும் 650 தன்னார்வலர்கள் இணைந்து ஒரு வலைப்பின்னல் உருவானது. தாகூர் இதை Quarantined Student-Youth Network என்று அழைக்க முடிவு செய்தார். இவர்கள் 26 தற்காலிக சமையலறைகளை அமைத்து இதுவரை 10,000 ரேஷன் தொகுப்புகளை விநியோகித்துள்ளனர். மேலும் 100,000 க்கும் மேற்பட்ட சமைத்த உணவை வழங்கியுள்ளனர். 


Advertisement

image

இதன்பிறகு மேற்கு வங்கத்தில் ஆம்பான் சூறாவளி எச்சரிக்கைகள் தொடங்கியது. மே 20 அன்று தாக்கிய நேரத்தில் டெல்லிக்கு புலம்பெயர்ந்தவர்கள் நிவாரணத்திற்காக இந்த முயற்சி ஏற்கனவே ரூ .12 லட்சத்தை திரட்டி உதவி இருந்தது. இந்தப் புயல் பாதிப்பால் இந்தக் குழு உதவிக்காக மீண்டும் ஒரு புதிய அழைப்பை வெளியிட முடிவு செய்தது.

image

மீண்டும் சமூக வலைத்தளத்தில் பிரச்சாரம் சூடுபிடித்தது. மே 27 க்குள், இக்குழு ரூ .60 லட்சம் வசூலித்தது. ஜூன் 14 க்குள், இது ரூ .95 லட்சமாக உயர்ந்தது. இந்த சாதனைகள் அனைத்துக்கும் முதல் விதைப் போட்டவர் தாக்கூர். அவரை இப்போது ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ சிறப்பான முறையில் கெளரவித்து தனிக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. தனது உழைப்பின் மூலம் உயர்ந்து நிற்கிறார் தாக்கூர்.


Advertisement

Advertisement
[X] Close