[X] Close

குடியரசுத் தலைவர் தேர்தல்: சசிகலாவுடன் 5 எம்எல்ஏக்கள் ஆலோசனை

5-MLAs-meet-Sasikala-regarding-President-election

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். 
சென்னையில் இருந்து கார் மூலமாக பெங்களூரு சென்ற இவர்கள் சிறைத்துறை நடைமுறைகளுக்குப் பின் உள்ளே அனுமதிக்க‌ப்பட்டனர். திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வந்த தினகரன் சசிகாலவை சந்திப்பது இது மூன்றாவது முறையாகும். அதே நேரத்தில் நீண்ட நாள்களுக்குப் பின்பு தம்பிதுரை சசிகலாவைச் சந்தித்துள்ளார். எம்.எல்.ஏக்கள் செந்தில் பாலாஜி,பழனியப்பன்,ஆரூர் முருகன்,ஆம்பூர் பாலசுப்பிரமணியன்,மானமதுரை மாரியப்பன் கென்னடி ஆகிய 5 எம்.எல்.ஏக்களும் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளனர். திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வந்த தினகரன் சசிகாலவை சந்திப்பது இது மூன்றாவது முறையாகும். அதே நேரத்தில் நீண்ட நாள்களுக்குப் பின்பு தம்பிதுரை சசிகலாவைச் சந்தித்துள்ளார். 
சசிகலாவை சந்தித்தித்து விட்டு வந்த டிடிவி.தினகரன் பேசும்போது, குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து பொதுச்செயலாளர் முடிவு செய்வார். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது பொய்யான தகவல். அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என அவர் தெரிவித்தார். இந்தச் சந்திப்பின்போது குடியரசுத்தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து சசிகலாவுடன் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.  
 


Advertisement

Advertisement
[X] Close