Published : 17,Jun 2020 07:16 AM

சுஷாந்த் மரண விவகாரம்: சல்மான்கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் மீது வழக்கு

I-have-filed-a-case-against-8-people-including-Karan-Jauhar--Salman-Khan-says-Advocate-Sudhir-Kumar-Ojha

பீகார் நீதிமன்றத்தில் கரன் ஜோகர், சல்மான்கான் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்

இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது இந்தியத் திரையுலகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், அவர் தூக்கிட்டே தற்கொலை செய்துகொண்டது பிரேதபரிசோதனையின் தெளிவானது.

image

இந்நிலையில் அவரது இறப்புக்கு பாலிவுட் திரையுலகம் மிகப்பெரிய காரணம் என அத்திரையுலகைச் சேர்ந்த சிலரே நேரடியாக கருத்து தெரிவித்து வருகின்றனர். பாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய அரசியல் நடப்பதாகவும், ஸ்டார் கிட்ஸ் என்று
அழைக்கப்படும் திரையுலகைச் சேர்ந்தவர்களின் வாரிசுகள் ஆதிக்கம் செலுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. ஸ்டார் கிட்ஸ்களின் அரசியல் நகர்வுகளால் மன உளைச்சலுக்கு ஆளானதாலேயே சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டதாகவும் இணையங்களில் கருத்துகள் தீயாய் பரவி வருகின்றன.

image

இந்நிலையில் பீகார் நீதிமன்றத்தில் கரன் ஜோகர், சல்மான்கான் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து ஏ.என்.ஐக்கு வழக்கறிஞர் சுதிர் குமார் அளித்துள்ள பேட்டியில், கரண் ஜோகர், சஞ்சய் லீலா பன்சாலி, சல்மான்கான் மற்றும் ஏக்தா கபூர் ஆகியோருக்கு எதிராக ஐபிசி 306,109,504,506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர்ந்துள்ளதாக தெரிவித்தார்..

7க்கும் மேற்பட்ட படங்களில் இருந்து சுஷாந்த் சிங் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இந்த மன உளைச்சலே அவரை இந்த நிலைக்கு தள்ளியுள்ளது என புகாரில் தெரிவித்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்