[X] Close

45 டன் எடை.. 25 அடி உயரம்.. அமெரிக்காவில் நிறுவப்பட்ட பிரம்மாண்ட அனுமன் சிலை..!   

உலகம்

45-tonne-Lord-Hanuman-statue-shipped-from-Telangana-installed-in-Delaware--USA---Details

தெலங்கானாவில் இருந்து அமெரிக்காவுக்கு 25 அடி அனுமன் சிலை கொண்டு செல்லப்பட்டுள்ளது


Advertisement

 அமெரிக்காவின் ஹொக்கசின் டெலாவேர் என்ற இடத்தில் இந்த 25 அடி உயர அனுமன் சிலை நிறுவப்பட்டுள்ளது. டெலாவேர் இந்து கோவில் சங்கம் இந்த சிலையை தெலங்கானாவில் இருந்து வரவழைத்து அமெரிக்காவில் உள்ள கோவில் அருகே நிறுவி உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் கப்பலில் ஏற்றப்பட்ட சிலை தற்போது அமெரிக்கா சென்றடைந்துள்ளது.

image


Advertisement

 இது அமெரிக்காவிலேயே உயரமான இந்து கடவுளின் சிலை என்ற பெருமையும், இரண்டாவது உயரமான வழிபாடு தொடர்பான சிலை என்ற பெருமையும் பெற்றுள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள டெலாவேர் இந்து கோவில் சங்கத்தின் தலைவர் பதிபந்தா சர்மா, இந்த சிலையின் எடை 45 டன்கள். இது
தெலங்கானாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

image


Advertisement

இந்த சிலையானது கருப்பு நிற கிரானைட்டில் இருந்து செதுக்கப்பட்டதாகவும், இந்த சிலையை உருவாக்க ஒரு வருட காலம் ஆனதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த சிலையை உருவாக்கவும், அமெரிக்கா கொண்டு சேர்க்கவும் இந்திய மதிப்பில் 76 லட்சம் செலவானதாகவும் கூறப்படுகிறது.

தண்ணீர் தொட்டியில் விழுந்த 10 அடி நீளமுள்ள பாம்பு உயிருடன் மீட்பு


Advertisement

Advertisement
[X] Close