ட்ரம்பை காதலிக்கவே இல்லை: பிரான்ஸ் முன்னாள் அதிபர் மனைவி மறுப்பு

ட்ரம்பை காதலிக்கவே இல்லை: பிரான்ஸ் முன்னாள் அதிபர் மனைவி மறுப்பு

ட்ரம்பை காதலிக்கவே இல்லை: பிரான்ஸ் முன்னாள் அதிபர் மனைவி மறுப்பு

ட்ரம்பை நான் ஒரு போதும் காதலித்தது இல்லை என்று பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோசியின் மனைவியும், மாடலுமான கர்லா புரூனி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோசியின் மனைவி கர்லா புரூனி (49) காதல் வயப்பட்டிருப்பதாகவும், ட்ரம்பின் 2-வது மனைவி மார்லா மாப்பில்ஸ் விவாகரத்துக்கு கர்லா புரூனி காரணமாக இருந்ததாகவும் கூறப்பட்டது.

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது இது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அதை அப்போது டிரம்ப் மறுத்தார். பின்னர் பேட்டி அளித்த டிரம்ப் தான் காதலித்தது உண்மை என கூறியிருந்தார். ட்ரம்ப் கூறியதற்கு கர்லா புரூனி தற்போது மறுப்பு தெரிவித்துள்ளார். “டிரம்பை நான் ஒரு போதும் காதலித்தது இல்லை” என்று புரூனி கூறியுள்ளார்.

கடந்த 2008-ம் ஆண்டு பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோசியை கர்லாபுரூனி திருமணம் செய்தார். அவர்களுக்கு 5 வயதில் குயிலியா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளார். இவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். கர்லா புரூனி மாடலிங் செய்த போது நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார். இவர் சர்கோசியை திருமணம் செய்த போது அந்த போட்டோ பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com