Published : 16,Jun 2020 12:15 PM

தெருவில் சுற்றித்திரிந்த கொரோனா பாதித்த இளைஞர் - 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

Coronation-Affected-Youth-on-the-Street---Case-Under-Section-3-by-police

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாலிபர் தெருவில் சுற்றி திரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

image

(கோப்பு புகைப்படம்)

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த 26 வயது வாலிபருக்கு கடந்த 25 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மருத்துவர்கள் அவரை 40 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் இவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளாமல் தெருவில் வெளியே சுற்றி திரிந்து வந்துள்ளார். இதனால் அக்கம்பக்கத்தினர் சிலர் சுகாதார துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

image

இந்தத் தகவலின் அடிப்படையில் சுகாதார துறை அதிகாரி விசாரணை நடத்திய போது வாலிபர் நோயை பரப்பும் வகையில் வெளியே சுற்றியது தெரியவந்தது. இதனால் சுகாதாரத் துறை அதிகாரி அளித்த புகாரின் பேரில் ஆயிரம் விளக்கு போலீசார் அந்த வாலிபர் மீது ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக தொற்று நோய் தடுப்பு சட்டம் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்