"கேப்டனானதை தவிர கோலி எதையும் சாதிக்கவில்லை" கவுதம் காம்பீர் !

"கேப்டனானதை தவிர கோலி எதையும் சாதிக்கவில்லை" கவுதம் காம்பீர் !
"கேப்டனானதை தவிர கோலி எதையும் சாதிக்கவில்லை" கவுதம் காம்பீர் !

இந்திய அணிக்கு விராட் கோலி கேப்டனானதை தவிர வேறு எதையும் சாதிக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் "கிரிக்கெட் கணெக்டெட்" நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய கவுதம் காம்பீர் " கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு. நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் ரன்களை குவிக்கலாம். லாரா போல ஏகப்பட்ட ரன்களையும் குவிக்கலாம், காலீஸ் போல எதையும் ஜெயிக்காமலும் இருக்கலாம். இதுவரை விராட் கோலியும் ஒரு கேப்டனாக எதையும் ஜெயிக்கவில்லை. அவர் இன்னும் சாதிக்க வேண்டியது இருக்கிறது" என்றார்.

மேலும் தொடர்ந்த காம்பீர் "ரன்களை குவிப்பது பெரிய விஷயமல்ல அதனை செய்துக்கொண்டே இருக்கலாம். ஆனால் அணிக்காக கோப்பையை வெல்லவில்லை என்றால் கிரிக்கெட் வாழ்க்கை முழுமை பெறாது" என்றார். இதே நிகழ்ச்சியில் தோனி குறித்துப் பேசிய அவர் "இந்த கிரிக்கெட் உலகம் ஒன்றைத் தவறவிட்டுவிட்டது. அது தோனி இந்தியாவுக்காக மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்காதது. அவர் கேப்டனாக இல்லாமல் போயிருந்தால், மூன்றாவது ஆட்டக்காரராகக் களமிறங்கியிருந்தால், கிரிக்கெட் உலகம் வேறு ஒரு தோனியை ரசித்திருக்கும். ஒரு முற்றிலும் மாறுபட்ட தோனியை நாம் கண்டு இருக்கலாம்"

மேலும் அந்தப் பேட்டியில் காம்பீர் ""அப்படி அவர் களமிறங்கியிருந்தால் இன்னும் ஏராளமான ரன்களை குவித்திருப்பார், பல சாதனைகளை உடைத்திருப்பார். சாதனைகளை விடுங்கள் சாதனைகள் படைக்கப்படுவதே உடைப்பதற்காக தானே. அதைவிட ஒரு மிக நல்ல பேட்ஸ்மேனை கிரிக்கெட் உலகம் ரசித்திருக்கும். அது அவர் கேப்டனாக இல்லாமல் போயிருந்தாலும் சாத்தியப்பட்டிருக்கும்" எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com