[X] Close

4 மாவட்டங்களில் முழு பொதுமுடக்கம் - எவையெல்லாம் இயங்கும்? எவையெல்லாம் இயங்காது?

தமிழ்நாடு

Areas-of-Public-Enforcement---What-are-the-relaxations-

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அங்கு என்னென்ன தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம்.


Advertisement

1.மருத்துவம் சார்ந்த அனைத்து பணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2.வாடகை ஆட்டோ, தனியார் வாகனங்களுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Advertisement

3.மாநில, மத்திய அரசு துறைகள் 33 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பணியாளர்கள் பணிக்கு வரத்தேவையில்லை. ஆனால் அதற்கான அனுமதியை சம்பந்தப்பட துறை அதிகாரிகளிடம் பெற்றிருக்க வேண்டும்.

image

4. 29, 30 ஆகிய தேதிகளில் மட்டும் வங்கிகள் இயங்க அனுமதிவழங்கப்பட்டுள்ளது. தானியங்கி இயந்திரங்கள் வழக்கம் போல் செயல்படும்.


Advertisement

5. காய்கறி, மளிகைக்கடைகள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்டவை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் மக்கள் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தாமல் வீட்டிலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும்.

6.பொது விநியோகக் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும்.  கட்டுப்படுத்த பகுதிகளில் இருக்கும் பொது விநியோகக் கடைகள் இயங்காது.

7. உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். ஆனால் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

8. ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து உணவு பெறும் வசதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

9. அம்மா உணவகங்கள் செயல்படும்.

image

10. பொது மக்களுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் காவல்துறையின் அனுமதியோடு இயங்கலாம்.

11. முதியோர், மாற்றுத்திறனாளி, நோயாளிகளுக்கு உதவி புரிபவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

12. இந்த 12 நாள் ஊரடங்கில் பணியிடத்தில் தங்கியிருந்து பணியாற்றும் கட்டுமான பணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

13. இந்த மாவட்டங்களில் இருந்து திருமணம், இறப்பு, மருத்துவம் உள்ளிட்டவற்றிற்காக வெளிமாவட்டங்களுக்கு செல்ல விரும்புவோர் முறையான ஆவணங்களை சமர்பிக்கும் பட்சத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

14. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எவ்வித செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது.

15. ரயில் மற்றும் விமான சேவைகளுக்கு தற்போது உள்ள நடைமுறையே தொடரும்.

 image

image

image

image

image

image


Advertisement

Advertisement
[X] Close