கேரளாவில் சாமியாரின் அந்தரங்க உறுப்பை துண்டித்த மாணவியை அவரின் ஆட்கள் கடத்தி வைத்துள்ளதாக மாணவியின் காதலன் புகார் அளித்துள்ளார்.
கேரளாவில் சாமியாரின் அந்தரங்க உறுப்பு துண்டிக்கப்பட்ட வழக்கில் அடித்தடுத்து அதிரடி திருப்பம் உருவாகி வருகிறது. சாமியாரின் உறுப்பை நான் வெட்டவில்லை, காவல்துறையினரே அவ்வாறு கதை கட்டி விட்டனர் என கடந்த சில தினங்களுக்கு முன்பு சர்ச்சைக்குள்ளான மாணவி தெரிவித்திருந்தார். இந்நிலையில் சட்டக்கல்லூரி மாணவியை சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்த சாமியாரின் ஆட்கள் கடத்தி வைத்துள்ளதாக, அவரின் காதலன் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும் சமீபத்தில் மாணவி அளித்த மாற்று வாக்குமூலம் கூட சாமியார் ஆட்கள் மிரட்டுதலின் பேரில் தான் என்றும், சாமியாரின் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவியே அவரின் அந்தரங்க உறுப்பை வெட்டியதுதான் நிஜம் என்றும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த சுவாமி கணேசானந்தா என்ற சாமியார், சட்டக் கல்லூரி மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற போது சாமியாரின் ஆணுறுப்பை மாணவி அறுத்து எறிந்தார் என செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இந்த மாணவியின் செயல் துணிச்சலானது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் பாராட்டியிருந்தார். இதனிடையே, தான் சாமியார் என்பதால் தனது ஆணுறுப்பு தனக்கு அவசியப்படாது என்பதால் தானே அதனை அறுத்துக் கொண்டதாக சாமியார் வாக்குமூலம் அளித்திருந்தார்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!