Published : 15,Jun 2020 03:23 AM

வரும் 19 ஆம் தேதி வரை ஹுண்டாய் தொழிற்சாலை மூடல்

hyundai-factory-closed-till-june-19

ஹுண்டாய் தொழிற்சாலை இன்று முதல் வரும் 19 ம் தேதி வரை மூடப்படுவதாக தொழிற்சாலை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில், காா்களை உற்பத்தி செய்யும் ஹுண்டாய் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் 2020-ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக இன்று முதல் வரும் 19 ம் தேதி வரை தொழிற்சாலை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No new plant in India till 2020: Hyundai - The Hindu BusinessLine

தெலங்கானாவில் மேலும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனாa!!

இந்த நாள்களில் தொழிற்சாலையில் உள்ள நூற்றுக்கணக்கான ரோபோக்கள், இயந்திரங்கள் ஆகியவை மேம்படுத்தப்பட்டு, அதிக செயல்திறன் உள்ள புதிய தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டு புதிய ரக காா்களை உற்பத்தி செய்யும் வகையில் மாற்றியமைக்கப்பட உள்ளன. இது ஆண்டு தோறும் நடைபெறும் வழக்கமான நடைமுறைதான் என்று ஹுண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்