
மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஐந்தாண்டுகளாக தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய தவளை இனம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவியான சோனாலி தனது குழுவினருடன் மேற்கு தொடர்ச்சி மலைகளில் புதிய தவளை இனம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார். ஐந்தாண்டுகள் தொடர் முயற்சியில் ஈடுபட்டு அவர், அழிந்துப்போனதாக கருதப்பட்ட பல தவளைகள் இனத்தை கண்டுபிடித்தார்.
மரமேறும் தவளை, பறக்கும் தவளை உள்ளிட்ட ஏராளமான இனங்களும் இதில் அடங்கும். இந்நிலையில் இந்த தேடுதல் வேட்டையில் யாருமே எதிர்ப்பார்க்காத வகையில் இந்திய தவளைகள் வகையைச் சார்ந்த புதிய ரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (Fejervarya) ஃபிஜிர்வர்யா என்று அழைக்கப்படும் இந்த தவளையின் வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் உள்ளிட்டவைகள் குறித்து குழுவினர் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலைகள் உயிரினங்களின் சொர்க்கம் என்றும், இங்கு இன்னும் உலகிற்கு தெரியாத உயிரினங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.