[X] Close

களத்தில் இருந்து போராடும் போதுதான் அதன் வலி தெரியும்: விஜய பாஸ்கர்

அரசியல்

Stop-criticizing-Stalin---Health-Minister

கேள்வி கேட்பது சுலபம்.  களத்தில் இருந்து போராடும் போதுதான் அதன் வலி தெரியும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.


Advertisement

புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் “இன்றைய இக்கட்டான சூழலில் நாங்கள் கொரோனாவை கட்டுப்படுத்த போராடி வருகிறோம்.எதிர்கட்சித் தலைவர் விமர்சனம் செய்வதை தவிர்த்து கொள்ள வேண்டும். களத்தில் இருந்து போராடும் போதுதான் அதன் வலி தெரியும். கேள்வி கேட்பது சுலபம். களத்தில் நின்று போராடுவது என்பது கடினமானது. 

image 


Advertisement

அரசியல் கட்சிகளும் விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும். அதற்கான நேரம் இதுவல்ல. நோயை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம். தயவு செய்து களத்தில் பணியாற்றிவரும் களப்பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் கருத்துகளை பதிவிட வேண்டும்.இறப்பு விகிதத்தை பொருத்தவரை அதனை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. மறைக்க வேண்டிய நிலையும் இல்லை. வெளிப்படைத் தன்மையோடு அரசு செயல்பட்டு வருகிறது, இது போன்ற தவறான குற்றசாட்டுக்களை கூறுபவர்கள் அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

image

கொரோனா பாதிப்பிற்கு உள்ளான அதிமுக எம்எல்ஏ, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று நலமுடன் உள்ளார். முதல்வரும் இரு முறை அவரிடம் நலம் விசாரித்து உள்ளார், நானும் அவரிடமும் மருத்துவமனை நிர்வாகத்திடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் ஆரோக்கியமாக  இருக்கிறார். அச்சப்பட தேவையில்லை” என்றர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close