[X] Close

ஆவடியில் கொரோனாவிற்கு கணவன் மனைவி உயிரிழப்பு

கொரோனா வைரஸ்

Husband-s-wife-dies-in-coronation

ஆவடி ஜே.பி.எஸ்டேட்டில் வசித்து வந்த கணவன் மனைவி கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.


Advertisement

ஆவடி ஜே.பி எஸ்டேட்டைச் சேர்ந்த 70 வயது நிரம்பிய ஒருவருக்கும் அவரது மனைவிக்கும் (61) கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் கணவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும், மனைவி ராமாபுரம் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்று வந்தனர்.  மனைவி கடந்த 7-ஆம் தேதி உயிரிழந்த நிலையில், இன்று அவரது கணவரும்  சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

image


Advertisement

இதனிடையே, ஆவடி மாநகராட்சில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்களிடம் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் சரிவர கடைபிடிக்கப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க  ஐந்து சிறப்பு ஆணையர்கள் புதியதாக நியமனம் செய்யப்பட்டனர். இது மட்டுமன்றி  துப்புரவு அலுவலர், ஆறு துப்புரவு உதவி ஆய்வாளர்களும் நியமிக்கப்பட்டனர். இருப்பினும் ஆவடி மக்கள் கொரோனா குறித்த போதிய விழிப்புணர்வு இன்றி, முகக் கவசம் அணியாமாலும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமலும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆவடி மாநகராட்சியில் மொத்தமாக கொரோனாவால் 370 பேர் பாதிக்கப்பட்டு 14 பேர் உயிர் இழந்துள்ளனர்.


Advertisement

Advertisement
[X] Close