Published : 13,Jun 2020 01:36 PM
"பாரதிராஜாவின் மனக்கண்ணாக விளங்கியவர் ஒளிப்பதிவாளர் கண்ணன்" வைரமுத்து இரங்கல் !

பாரதிராஜாவின் மனக்கண்ணாகவும், கலைக் கண்ணாகவும் விளங்கியவர் ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் என்று கவிஞர் வைரமுத்து தன்னுடைய இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மூத்த கலைஞர்களுள் ஒருவர் கண்ணன். இவர் பாரதிராஜா இயக்கிய 40க்கும் மேற்ப்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பாரதிராஜாவின் நெருங்கிய நண்பராக அறியப்பட்ட இவரை பாரதிராஜாவின் கண்கள் என்றும் அழைப்பர். புகழ்பெற்ற இயக்குநர் பீம்சிங்கின் மகனான இவர் எடிட்டர் லெனினின் இளைய சகோதரர்.
கடந்த சில நாட்களாக இதய நோயால் அவதிப்பட்டு வந்த இவருக்கு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 69. அவரது மறைவுக்கு கவிஞர் வைரமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாரதிராஜாவின் மனக்கண்ணாகவும்
— வைரமுத்து (@Vairamuthu) June 13, 2020
கலைக் கண்ணாகவும் விளங்கியவர் பி.கண்ணன்.
என் முதல் பாடலான
பொன்மாலைப்பொழுதுக்குத் தங்கம் பூசியவர்.
தேசியவிருது பெற்ற என் 7பாடல்களில்
2பாடல்களை ஒளிபெயர்த்தவர்.
குணவான் ஆகிய கனவான்.
அவர் மறைவால் இந்த உலகம் ஒருகணம்
நிறமிழந்துபோனதாய் நெஞ்சுடைகிறேன்.
அதில் " பாரதிராஜாவின் மனக்கண்ணாகவும் கலைக் கண்ணாகவும் விளங்கியவர் பி.கண்ணன். என் முதல் பாடலான, பொன்மாலைப்பொழுதுக்குத் தங்கம் பூசியவர். தேசியவிருது பெற்ற என் 7பாடல்களில் 2 பாடல்களை ஒளிபெயர்த்தவர். குணவான் ஆகிய கனவான். அவர் மறைவால் இந்த உலகம் ஒருகணம் நிறமிழந்துபோனதாய் நெஞ்சுடைகிறேன்" என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.