
தமிழில், கவிதை பாடும் அலைகள், நாளைய தீர்ப்பு, ராமன் அப்துல்லா, தவசி, சுல்தான் உட்பட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் ஈஸ்வரி ராவ். டி.வி. தொடர்களிலும் நடித்துள்ள இவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினியின் ’காலா’ படத்தில் நடிக்கிறார். இதில் அவர் ரஜினி மனைவியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி அவரிடம் கேட்டபோது, அது பற்றி நான் ஏதும் சொல்ல முடியாது என்றார். பின்னர், ‘ரஜினி படத்தில் நடிப்பதால் எனது குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். என் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சி. இதில் எனது ரோல் பற்றி நான் இப்போது சொல்ல இயலாது. ஆனால், இந்த வாய்ப்பால் மிகுந்த உற்சாகமடைந்திருக்கிறேன்’ என்றார் ஈஸ்வரி ராவ்.
பா.ரஞ்சித் இயக்கும் இந்தப் படத்தில் ஹுமா குரேஸி, சமுத்திரக்கனி, நானா படேகர் உட்பட பலர் நடிக்கின்றனர்.