Published : 20,Jun 2017 04:37 AM

தடைக்குப் பின் ஹீரோவான ஆமிர்: அண்ணன் நெகிழ்ச்சி!

Mohammad-Amir-puts-his-dark-past-behind-him-to-shine-brightly-for-Pakistan-at-the-Champions-Trophy

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை வென்று கோப்பையை கைப்பற்றியிருக்கிறது பாகிஸ்தான் அணி. பாகிஸ்தானின் வெற்றிக்கு வேகப் பந்துவீச்சாளர் முகமது ஆமிரின் பங்கு முக்கியமானது. அவர்தான் இந்தியாவின் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் ரோகித் சர்மா, தவான், கேப்டன் கோலி ஆகியோரின் விக்கெட்டை இரக்கமே இல்லாமல் சாய்த்தவர். இதனால் பாகிஸ்தானில் ஆமிர், இப்போது ஹீரோ. 

இந்த ஹீரோ, சூதாட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால் 5 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் இருந்து ஓரங்கட்டப்பட்டிருந்தவர். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அவர் டி 20 போட்டிகளுக்காக பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டார். அதில் விக்கெட்டுகள் வீழ்த்த, சாம்பியன்ஸ் கோப்பைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆமிரின் அண்ணன் நவீத் கூறும்போது, ‘ சூதாட்ட புகார் நேரத்தில் எங்களால் யாரிடமும் தலை நிமிர்ந்து பேசமுடியவில்லை. அவமானமாக இருக்கும். எனது அப்பா அப்செட் ஆகிவிட்டார். ஆனால் அப்போது அவனுக்கு வயது 18 தான். சின்ன வயது, தெரியாமல் தவறு செய்திருப்பான். அவனுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். சூதாட்ட தண்டனையில் இருந்து மீண்டிருக்கிற அவன் ஏதாவது சாதிப்பான் என நினைத்தோம். அதை ஞாயிற்றுக்கிழமை செய்துவிட்டான் ஆமிர். இப்போது தலைநிமிர்ந்து நிற்க முடிகிறது. பார்க்கிறவர்கள் பெருமையாக பேசுகிறார்கள். ஊரில் இருந்து நிறைய போன் வருகிறது’ என்று மகிழ்ச்சி பொங்க பேசுகிறார் நவீத்.
ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஆமிருக்கு ஐந்து அண்ணன்கள். ஒரு சகோதரி இருக்கிறார்கள்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்