[X] Close

”ஆரோக்கிய உணவு, நல்ல தூக்கம், உறுதியான மனநிலை..” - கொரோனாவிலிருந்து மீண்ட இளம்பெண்..!

இந்தியா

I-Defeated-COVID-19-With-Strong-Mindset--Good-Sleep---Healthy-Food

கொரோனாவில் இருந்து மீண்ட இளம்பெண் ஒருவர் எப்படி மீண்டேன் என்ற அவரது கதையைப் பகிர்ந்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மலையேற்றம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். கடந்த மே மாதம் வீடு திரும்பிய அவருக்கு உடல் சோர்வு, மூக்கடைப்பு மற்றும் கண்ணுக்குள் வலி ஏற்பட்டுள்ளது. சாதாரண காய்ச்சலாக இருக்கும் என எண்ணிய அப்பெண், வீட்டிலிருந்து பெரியவர்களின் அறிவுறுத்தல் படி கசாயம் தயார் செய்து சாப்பிட்டுள்ளார். ஆனால் 3 நாட்களாகியும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்பதால் பின்னர் மே 12ஆம் தேதி கொரோனா வைரஸுக்கான ரத்தப் பரிசோதனை செய்துள்ளார். அவருக்கு மே 14ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

image


Advertisement

இதையடுத்து அவரைத் தனிமைப்படுத்திய மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சைகளை அளித்துள்ளது. ஆரோக்கியமான உணவு, சிறிய நடைப்பயிற்சி மற்றும் மருந்துகள் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவிட்டதே என்று மனமுடையாத அப்பெண், மன தைரியத்துடன் இருந்துள்ளார். அத்துடன் தனக்குச் சாதாரண காய்ச்சல் தான், அது விரைவில் குணமாகிவிடும் என மனதிற்குள் நம்பிக்கையை வளர்த்துள்ளார். வீடியோ கால் மூலம் குடும்பத்தினர் நண்பர்களுடன் பேசி சிரித்துள்ளார். நம்பிக்கை அளிக்கும் பாடல்கள் கேட்பது, புத்தகங்களைப் படிப்பது என நேரத்தைச் செலவிட்டுள்ளார். நல்ல தூக்கம், ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டுள்ளார். அத்துடன் மருத்துவர்கள் கூறிய அறிவுரையைப் பின்பற்றி வந்துள்ளார்.

image

இதைத்தொடர்ந்து மே 18ஆம் தேதி எடுக்கப்பட்ட ரத்தப் பரிசோதனையில் அவருக்கு மீண்டும் கொரோனா உறுதியாகியுள்ளது. ஆனாலும் நம்பிக்கையைக் கைவிடாத அப்பெண் தொடர்ந்து தான் மேற்கொண்ட செயல்களைத் தொடர்ந்துபின்பற்றி வந்துள்ளார். பின்னர் மே 22ஆம் தேதி மீண்டும் எடுக்கப்பட்ட ரத்தப் பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என வந்திருக்கிறது. இவ்வாறாக அப்பெண் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார். மேலும், தனக்கு உதவிய மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார்.


Advertisement

முகம் சிதைந்த நிலையில் திரியும் குரங்கு : கேரளாவில் மற்றொரு பரிதாபம்...!


Advertisement

Advertisement
[X] Close