[X] Close

ஒரே நாளில் புதிதாக 3,254 பேருக்கு பாதிப்பு.. மகாராஷ்டிராவில் வேகமாக பரவும் கொரோனா..!

இந்தியா

Another-new-high-of-Covid-19-cases-takes-Maharashtra---s-tally-past-94-000

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் புதிதாக 3254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94,041 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74,52,091 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,18,893 ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 37,49,793 ஆக உள்ளது.

அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,66,401 ஆக உள்ளது. இதைத்தொடர்ந்து பிரேசில் இரண்டாவது இடத்திலும், ரஷ்யா, லண்டன், ஸ்பெயின் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.


Advertisement

India coronavirus, COVID-19 live updates, June 10: Record 1,927 ...

”அடையார் என எழுதுவதை இனியாவது அடையாறு என எழுதட்டும்” - தொல். திருமாவளவன்

தொடர்ச்சியாக இந்தியா கொரோனா பாதிப்பில் 6-வது இடத்தில் உள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,87,155 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,107 ஆக உள்ளது. சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,40,979 ஆக உள்ளது.

இந்தியாவை பொருத்தவரை கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் ஒரேநாளில் 3,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94,041 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 149 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,438 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

image

புதிதாக நோய் தொற்று கண்டறியப்பட்டவர்களில் 1,567 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள். மும்பையில் இதுவரை மொத்தம் 52,667 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மட்டும் 97 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close