Published : 10,Jun 2020 12:44 PM

தமிழகத்தில் இன்று மட்டும் 1927 பேருக்கு கொரோனா - 19 பேர் உயிரிழப்பு

tamilnadu-reached-new-high-in-corona-positive-cases

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 1927 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், தமிழகத்திலிருந்து 1,897, பிற மாநிலங்கள், நாடுகளிலிருந்து வந்தவர்கள் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 24,531லிருந்து 25,937 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 1390 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 அதேபோல், தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 326 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 11வது நாளாகத் தொடர்ந்து இரட்டை இலக்க எண்ணிக்கையில் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் மட்டும் கொரோனா பாதிப்பால் 94 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்த பாதிப்பு : 36,841
இதுவரை குணமடைந்தோர் - 19,333

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்