காங்கிரஸ் ஆட்சியின்போது சீனர்கள் இந்திய எல்லையை ஆக்கிரமித்தது உண்மைதான் என்று லடாக் தொகுதி பாஜக எம்பி ஜம்யங் செரிங் நம்கியால், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்குப் பதிலளித்துள்ளார்.
இந்திய - சீன எல்லைப் பகுதியில் இருநாடுகளும் ராணுவப் படைகளைக் கடந்த சில நாள்களுக்கு முன்பு குவித்தன. இதனையடுத்து பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதற்கடுத்து இரு நாடுகளுக்கு இடையே ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று ட்விட்டரில் "லடாக்கில், இந்தியப் பகுதியைச் சீனா ஆக்கிரமித்துள்ளதா? என ராஜ்நாத் சிங்கிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த லடாக் பாஜக எம்பி ஜம்யங் செரிங் நம்கியால் " உண்மைகளை அடிப்படையாகக் கொண்ட எனது பதிலுக்கு ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியினரும் உடன்படுவார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் மீண்டும் தவறாக வழிநடத்த முயற்சிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்துவிட்டு, காங்கிரஸ் ஆட்சியின்போது எப்போதெல்லாம் சீனா, இந்திய எல்லையை ஆக்கிரமித்தது என்ற பட்டியலையும், வரைபடத்தையும் இணைத்துள்ளார்.
Once RM is done commenting on the hand symbol, can he answer:
Have the Chinese occupied Indian territory in Ladakh? — Rahul Gandhi (@RahulGandhi) June 9, 2020
அதில் ""ஆம், சீனர்கள் இந்தியப் பகுதியை ஆக்கிரமித்துள்ளனர்" என்று தெரிவித்துள்ள அவர், 1962 இல் காங்கிரஸ் ஆட்சியின் போது அக்சாய் சின் (37,244 சதுர கி.மீ). 2008 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில், சுமூர் பகுதியில் தியா பங்னக் மற்றும் சாப்ஜி பள்ளத்தாக்கு (250 மீ நீளம்). டெம்ஜோக்கில் உள்ள ஜோராவர் கோட்டை ஆகியவை 2008ம் ஆண்டில் மக்கள் விடுதலை ராணுவத்தால் அழிக்கப்பட்டது மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது 2012ம் ஆண்டில் அப்சர்விங் பாயிண்ட் அமைக்கப்பட்டது.மேலும் 13 சிமென்ட் வீடுகளுடன் சீன / புதிய டெம்ஜோக் / காலனியை உருவாக்கியது.
I hope @RahulGandhi and @INCIndia will agree with my reply based on facts and hopefully they won't try to mislead again.@BJP4India @BJP4JnK @sambitswaraj @JPNadda @blsanthosh @rajnathsingh @PTI_News pic.twitter.com/pAJx1ge2H1 — Jamyang Tsering Namgyal (@MPLadakh) June 9, 2020
2008-2009ம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது டங்டிக்கும் மற்றும் டெம்ஜோக்கிற்கும் இடையில் உள்ள டூம் செலியை (பண்டைய வர்த்தக மையம்) இந்தியா இழந்தது. டெம்ஜோக் பகுதியின் கண்ணோட்டம். 2012 வரை காங்கிரஸ் ஆட்சியின் போது சீனா இந்திய நிலத்தை ஊடுருவியது தொடர்பான .ஒரு வரைபடத்தை அவர் இணைத்துள்ளார்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்