Published : 20,Jun 2017 02:27 AM
சச்சின் டெண்டுல்கரின், தமிழ்த் தலைவாஸ்!

புரோ கபடி போட்டிக்கான தமிழ்நாடு அணிக்கு, ’தமிழ் தலைவாஸ்’ என பெயரிடப்பட்டுள்ளதாக சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
புரோ கபடி லீக் போட்டி 2014 ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பெங்கால், பெங்களூர், டெல்லி, ஜெய்ப்பூர், பாட்னா, புனே, தெலுங்கு, மும்பை ஆகிய 8 அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டிகள் ரசிகர்களிடம் அதிக ஆதரவைப் பெற்றுள்ளதால் 5-வது புரோ கபடி லீக் போட்டியில் தமிழ்நாடு, குஜராத், ஹரியானா, உத்தர பிரதேசம் ஆகிய 4 அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
தமிழக அணியை கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாங்கியுள்ளார். இந்த அணிக்கு ’தமிழ் தலைவாஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை சச்சின் டெண்டுல்கர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு கபடி டீமின் கோச் பாஸ்கரன் கூறும்போது, ‘தலைவா என்றால் பாஸ். தலைவர் என்பதற்கான பொதுவான பெயர் இது. எல்லோரும் எளிதாக இதை நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்பதால் இந்த தலைப்பு சிறப்பானது’ என்றார்.
5-வது புரோ கபடி லீக் போட்டி ஜூலை 28-ம் தேதி தொடங்குகிறது. இதில் 12 அணிகள் பங்கேற்கும். மொத்தம் 130 ஆட்டங்கள். 13 வாரம் நடைபெறும்.