திருடப்பட்ட சொகுசு கார் - 10 பெட்ரோல் பங்குகளில் மோசடி; விரட்டி பிடித்த போலீஸ்

திருடப்பட்ட சொகுசு கார் - 10 பெட்ரோல் பங்குகளில் மோசடி; விரட்டி பிடித்த போலீஸ்
திருடப்பட்ட சொகுசு கார் - 10 பெட்ரோல் பங்குகளில் மோசடி; விரட்டி பிடித்த போலீஸ்

திருடிய சொகுசு காருக்கு வெவ்வேறு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுக்கொண்டு பணம் தராமல் தப்பிய இரண்டு நபர்கள் சிசிடிவி கேமரா உதவியுடன் குன்றத்தூர் அருகே கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால். இவர் தன்னுடைய சொகுசு காரை காணவில்லை என கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் கடந்த மே 28/ஆம் தேதி புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டு காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை செய்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த போந்தூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் இரண்டு மர்ம நபர்கள் 1800 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு அதற்கு உண்டான பணத்தை அளிக்காமல் தப்பிச்சென்றனர்.

பெட்ரோல் பங்க் ஊழியர்கள் இதுதொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்று கொண்ட ஸ்ரீபெரும்புத்தூர் குற்றப்பிரிவு காவல்துறை அந்த மர்ம நபர்கள் ஓட்டிச்சென்ற காரை சுமார் 50 கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்று குன்றத்தூர் அருகே பிடித்தனர். பின்னர் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கூடுவாஞ்சேரி அருகே இந்த காரை திருடி கொண்டு ஒவ்வொரு நாளும் நம்பர் பிளேட்டை மாற்றி வெவ்வேறு பெட்ரோல் பங்குக்கு சென்று பெட்ரோல் போட்டுக்கொண்டு தப்பிய விபரம் தெரியவந்தது.

இன்றுவரை சுமார் 10-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுக்கொண்டு பணம் தராமல் ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காரை திருடியவர்கள் சிங்கப்பெருமாள் கோவிலைச் சேர்ந்த முகமதுஅப்துல்லா, மற்றும் மாங்காடு அருகே பட்டூர் பகுதியை சேர்ந்த அபுல் ஹஸன் ஆகியோர் என்பது தெரியவந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com