Published : 08,Jun 2020 02:05 AM

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு

First-corona-dead-in-Ranipet-district

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பொய்ப்பாக்கத்தை சேர்ந்த 61 வயது, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 14 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு சிகிச்சை முன்னேற்றம் ஏற்படாமல் உயிரிழந்துள்ளார்.

image

கொரோனா பரிசோதனை முடிவுகளில் குளறுபடி?: தவிக்கும் கர்ப்பிணிப் பெண்..! 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை 130 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 94 பேர் குணமடைந்த நிலையில் மாவட்டத்தில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அரக்கோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மாவட்ட நிர்வாகம் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் காவல்துறை கொண்டு அரக்கோணத்தை சுற்றியும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்