விராட் கோலியுடனான நட்பு மிகவும் சுவாரஸ்யமானது என நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய கிரிக்கெட் உலகில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக திகழ்பவர்கள் இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன். இவர்கள் இருவரும் 19 வயதினருக்குட்பட்ட கிரிக்கெட் போட்டிகளிலிருந்தே அறிமுகம் ஆனவர்கள். எதிரெதிர் அணிகளுக்காக விளையாடி வந்ததால் இருவருக்கும் இடையே ஆரம்பத்தில் உரசல்கள் இருந்தன. ஆனால் தற்போது இருவரும் நல்ல நண்பர்களாக உள்ளனர்.
இந்நிலையில் விராட் கோலியுடனான நட்பு குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேன் வில்லியம்சன் தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். அதில், “ நாங்கள் ஒருவருக்கொருவர் எதிர் அணிகளில் விளையாடினோம். இளம் வயதிலேயே நாங்கள் சந்தித்துக் கொண்டது சிறப்பானது. அந்தப் பயணம் தற்போது வரையிலும் நன்றாகத் தொடர்கிறது. எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது மிகவும் சுவாரஸ்யமானது. நாங்கள் நீண்ட காலமாக ஒருவருக்கு ஒருவர் எதிராக விளையாடி வந்தோம்” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் கடந்த சில வருடங்களாக கிரிக்கெட் தொடர்பான தங்கள் புரிதல்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். நேர்மையான எண்ணங்கள் மற்றும் ஆட்டக்களம் தொடர்பான வியூகங்களையும் பரிமாற்றம் செய்துகொள்வதாகக் கூறியுள்ளார். தாங்கள் இருவரும் விளையாடுவதில் சிறிய மாற்றங்கள் இருந்தாலும், அதுவே தங்கள் தனித்துவமாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
Loading More post
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
மும்பையை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்