Published : 19,Jun 2017 01:43 PM
"ஒருவழியாக வெளியாகிறது...... "லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா" படம்"

சர்வதேச அளவில் விருதுகளை குவித்த "லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா" என்ற படம் நீண்ட நாள் போராட்டத்திற்கு பின் இந்தியாவில் வெளியாகவுள்ளது.
தி டர்ட்டி பிக்சர், உத்தா பஞ்சாப் ஆகிய சர்ச்சைக்குரிய படங்களை தயாரித்த பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த சர்ச்சைக்குரிய படம் "லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா". சுதந்திரத்தை தேடி அலையும் நான்கு பெண்களின் சமூக வாழ்க்கை மற்றும் பிரைவேட் வாழ்க்கை பற்றி வெளிப்படையாக பேசும் இப்படத்தை இந்தியாவில் வெளியிட தணிக்கை குழுவினர் தடை விதித்தனர். இதனை எதிர்த்து இப்படத்தின் தயாரிப்பாளர்கள் மேல்முறையீட்டு குழுவிடம் முறையீடு செய்தனர். இதனைத் தொடர்ந்து 6 மாத போராட்டத்திற்கு பின் அடுத்த மாதம் 21ம் தேதி இப்படம் இந்தியா முழுவதும் ரிலீசாகிறது. இந்த படம் இதுவரை சர்வதேச அளவில் 10க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது. இதில் கொங்கனா சென், பத்தக் ஷா உள்ளிட்ட பிரபல நடிகைகள் நடித்துள்ளனர். ஆண்களுக்கு இணையாகவும் அவர்களை விட அதிகமாகவும் மனஉளைச்சல்களை தினந்தோறும் சந்திக்கும் நான்கு பெண்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வாழ துடிக்கும் கதை தான் இந்த படத்தின் கரு.