[X] Close

ஜிஎஸ்டி சட்ட மசோதா நிறைவேற்றம்: திமுக வெளிநடப்பு

GST-bill-in-TN-assembly---DMK-walks-out


தமிழக சட்டப்பேரவையில் ஜிஎஸ்டி சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மசோதா தாக்கல் செய்யப்பட்டதைக் கண்டித்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்
 
நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமாலாக உள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவையில் அந்த மசோதாவை வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி அறிமுகப்படுத்தினார். மசோதா மீதான விவாதத்தில் பேசிய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஜிஎஸ்டி மசோதாவை தற்போதைய சூழலில் அமல்படுத்தக் கூடாது என்றும், சட்டமன்ற பொறுப்புக் குழுவுக்கு அனுப்பிய பின்னரே நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அவருக்குப் பதிலளித்து பேசிய நிதியமைச்சர் ஜெயக்குமார், ஜிஎஸ்டி வரிவிதிப்பால் பாதிப்பு ஏற்பட்டால் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று தெரிவித்தார். ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்பட்டதைக் கண்டித்து திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். எதிர்கட்சிகள் இல்லாத நிலையில் ஜிஎஸ்டி மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். 


Advertisement

Advertisement
[X] Close