[X] Close

தமிழகத்தில் மீண்டும் வாட்டிய வெயில்: சென்னை உள்ளிட்ட 7 இடங்களில் சதம் !

தமிழ்நாடு

Again-temperature-rise-in-Chennai

கடந்த சில நாள்களாக தமிழகத்தில் வெப்பம் தணிந்திருந்த நிலையில் இன்று 7 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது.


Advertisement

தமிழகத்தில் கடந்த 28ஆம் தேதியுடன் கத்திரி வெயில் முடிவடைந்தது. ஆனால் இதைத்தொடர்ந்தும் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதற்கிடையே சில மாவட்டங்களில் மழை பொழிவும் இருந்தது.

image


Advertisement

இந்நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழையைத் தொடங்கியுள்ளதால் அம்மாநிலத்தையொட்டி பகுதிகளில் வெயில் குறைந்து, மழைபொழிவு தொடங்கவுள்ளது. இருப்பினும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று 7 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதன்படி திருத்தணி 105.9, வேலூர் 105.4, சென்னை மீனம்பாக்கம் 102.9, நுங்கம்பாக்கம் 102.5, மதுரை 102.2, திருச்சி 101.6, நாமக்கல் 100.4 ஆகிய இடங்களில் டிகிரி பாரன்ஹீட்டாக வெப்பம் பதிவாகியிருக்கிறது.


Advertisement

Advertisement
[X] Close