Published : 06,Jun 2020 12:59 PM

”கொள்கையில் யாருக்கும் விதிவிலக்கு கிடையாது” - ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்

Mark-Zuckerberg-promises-to-review-content-policies-after-facing-backlash-over-Trump---s-post

ஃபேஸ்புக் பதிவுகளின் உள்ளடக்கம் தொடர்பான கொள்கைகளை மேம்படுத்த முயற்சி எடுக்கப்படுவதாக அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் காவலர் ஒருவர் முட்டியால் கழுத்தை நசுக்கியதில் மூச்சுவிட முடியாமல் உயிரிழந்தார் ஜார்ஜ் பிளாய்ட். இவரின் மரணத்திற்கு நீதி வேண்டி நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கம் முதல் வெள்ளை மாளிகை வரை பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டார்.

image

போராட்டம் என்ற பெயரில் கறுப்பின மக்கள் கடைகளைச் சூறையாடினால் துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் எனத் தெரிவித்து இருந்தார். இந்தப் பதிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது தங்கள் நிறுவன விதிமுறைக்கு எதிரானது எனக்கூறி ட்விட்டர் நீக்கியது. ஆனால் ஃபேஸ்புக் நீக்கம் செய்யவில்லை. இதனால் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்கள் பலரும் தங்கள் நிறுவனத்தின் செயல்பாட்டிற்குக் கண்டனம் தெரிவித்தனர். சிலர் அடையாள வேலைநிறுத்தம் செய்தனர். ட்ரம்பின் கருத்து அரசின் அறிவிப்பு போலவே பார்க்கப்பட்டதாகவும் அதனால் அதனை நீக்கவில்லை எனவும் ஃபேஸ்புக் விளக்கம் அளித்தது. ஆனாலும் ஃபேஸ்புக் மீது விமர்சனங்கள் குவிந்தனர்.

image

இந்நிலையில் ஃபேஸ்புக் பதிவுகளின் உள்ளடக்கம் தொடர்பான கொள்கைகளை மேம்படுத்த முயற்சி எடுக்கப்படுவதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். எங்களது தற்போதைய உள்ளடக்கம் தொடர்பான கொள்கை என்னவென்றால் பதிவானது வன்முறையைத் தூண்டுவதாக இருந்தால் அது பயனாளர்களைச் சென்று சேரும் முன்பே உடனடியாக முடக்கப்படும். இந்தக் கொள்கையில் யாருக்கும் விதிவிலக்கு கிடையாது. இந்தக் கொள்கை முடிவு சரியானதாக இருப்பதாக நான் நினைக்கிறேன்.

ஆனால் இதில் சில மேம்பட்ட ஆலோசனைக் கூறுபவர்களையும் நாங்கள் மதிக்கிறோம். அனைவரையும் ஆலோசனைகளையும் நாங்கள் மதிக்கிறோம். உள்ளடக்கம் தொடர்பான கொள்கைகளை மேம்படுத்த எங்கள் குழுவினருடன் ஆலோசித்து வருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

திருமலை திருப்பதி குறித்து அவதூறு பேச்சு: நடிகர் சிவகுமார் மீது வழக்கு

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்