Published : 18,Jan 2017 11:29 AM
பீட்டாவுக்கு நன்றி சொன்ன மாணவர்கள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்த தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்களை ஒன்றிணைத்த பீட்டா அமைப்புக்கு நன்றி என மாணவர்கள் கூறியுள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரியும், பீட்டாவுக்கு தடை கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அதன் ஒருபகுதியாக விருதுநகர் தேசபந்து மைதானத்தில் கூடிய பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், பெண்கள் என கூடிய பல்வேறு தரப்பினர் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தை முன்னெடுக்க தமிழகம் முழுவதும் இளைஞர்களை ஒன்றிணைத்த பீட்டா அமைப்புக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளனர். சுதந்திர போராட்ட காலத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்ட விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தற்போது ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தினை அப்பகுதி இளைஞர்கள் முன்னெடுத்துள்ளனர்.