
செஞ்சிப் பகுதிகளில் உள்ள கடைவீதியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் முகக்கவசம் அணியாமல் விற்பனை செய்து கொண்டிருந்த ஜவுளிக் கடைக்கு சீல் வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சிப் பகுதியில் மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வில் ஈடுபட்டார். கடை வீதிகளில் செயல்பட்டுக்கொண்டிருந்த ஓட்டல்கள் மற்றும் மளிகைக் கடைகள், ஜவுளிக் கடைகளை என அனைத்தையும் ஆய்வு செய்த அவர், கூட்டுரோடு அருகே உள்ள ஜவுளிக் கடையையும் ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பணியாளர்கள் முகக் கவசம் அணியாமல் துணிகளை விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதனைக் கண்டித்த மாவட்ட ஆட்சியர் கடைக்கு ஒரு வாரம் சீல் வைத்து உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியருடன் டி.எஸ்.பி.நீதி ராஜ், தாசில்தார், பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் உடனிருந்தனர்.