Published : 03,Jun 2020 07:18 AM
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்: தொல்.திருமாவளவன்

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இன்று அரியலூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் இதைத் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தற்போதைய சூழ்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தக்கூடாது என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு.
மாணவர்கள் மன உளைச்சலில் உள்ளனர். ஆகவே உடனடியாக தேர்வு ரத்து என்ற முடிவை எடுக்க வேண்டும் என அமைச்சரை கேட்டுக் கொள்கிறோம். புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவர்களுக்கு 10,000 ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்டு அழைத்து வர இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுவதால் சென்னையை முழுவதுமாக தனிமைப்படுத்தி அதிக பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்” எனக் கூறினார்