Published : 19,Jun 2017 06:57 AM
10-வருடத்தில் 50 படம்: காஜல் மகிழ்ச்சி!

தெலுங்கில் ’லக்ஷ்மி கல்யாணம்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் காஜல் அகர்வால். இந்தப் படம் 2007-ல் வெளியானது. தேஜா இயக்கியிருந்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கில் நடித்து வந்த காஜல், இப்போது 50-வது படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை காஜலை அறிமுகப்படுத்திய தேஜா இயக்குகிறார். ராணா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்துக்கு, நேனே ராஜு நேனே மந்திரி’ (நானே ராஜா நானே மந்திரி) என்று டைட்டில் வைத்துள்ளனர்.
’ இன்று (ஜூன் 19) எனக்கு பிறந்த நாள். ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்து 10 வருடமாகிவிட்டது. எனது ஐம்பதாவது படம், ’நேனே ராஜு நேனே மந்திரி’. இந்த படம் எனக்கு ஸ்பெஷல். என்னை ஹீரோயினாக அறிமுகப்படுத்திய தேஜா இயக்கத்தில் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி. அவரிடம்தான் சினிமா பற்றி பல விஷயங்களை கற்றேன். இதில் ராணா ஹீரோ. அவர் என் நண்பர். நண்பர்களுடன் பணியாற்றுவது எளிதாகவே இருக்கும். அஷுதோஷ் ராணா, நவ்தீப், கேத்ரின் தெரசா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் ஒரே நேரத்தில் இந்தப் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது’ என்கிற காஜலுக்கு இப்போது 32 வயது!