[X] Close

நாட்டை அதிரவைத்த ஜெசிகா லால் கொலை வழக்கு : குற்றவாளி மனுசர்மா விடுதலை

இந்தியா

Activists-Say-Release-Of-Manu-Sharma-From-Jail-Is--Unfortunate-

இந்திய வரலாற்றில் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்றான ஜெசிகா லால் கொலை வழக்கு குற்றவாளி மனுசர்மா விடுதலை செய்யப்பட்டார்.

1999ஆம் ஆண்டு மத்திய அமைச்சராக இருந்த வினோத் சர்மாவின் மகனான மனு சர்மா, டெல்லியில் உள்ள உணவகம் ஒன்றில் ஜெசிகா லால் என்ற மாடல் அழகியை சுட்டுக்கொன்றார். இந்த விவாகரம் தொடர்பாக விசாரித்த டெல்லி கீழமை நீதிமன்றம் மனு மனு சர்மாவை விடுதலை செய்தது. இதைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு மனுசர்மா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.

image


Advertisement

அத்துடன் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் மனுசர்மா திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தரப்பில் 2010ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, மீண்டும் குற்றம் உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறையில் நன்னடத்தையுடன் செயல்பட்டதாக 2018ஆம் ஆண்டு மனுசர்மா திறந்த வெளி சிறைக்கு மாற்றப்பட்டார்.

image

பின்னர் சிறையிலிருந்து கொண்டே, கைதிகள் மறுவாழ்வு தொண்டு நிறுவனத்தில் பணியாற்றினார். இந்நிலையில் மனுசர்மா நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்டார். டெல்லி உள்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் அளித்த பரிந்துரையை ஏற்று, துணை நிலை ஆளுநர் அனில் ஃபைசால் அவருக்கு விடுதலை உத்தரவை பிறப்பித்தார்.


Advertisement

மறைந்த இலங்கை அமைச்சர் மகளின் உருக்கமான கடிதம்


Advertisement

Advertisement
[X] Close