[X] Close

கருணாநிதி பிறந்த நாளுக்காக எவ்வித ஆடம்பர நிகழ்வுகளும் வேண்டாம்: மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு

stalin-statement-about-karunanithi-birthday

(கோப்பு புகைப்படம்)

கருணாநிதியின் 97-வது பிறந்த நாள் விழாவையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில், “நம் உயிருடன் கலந்திருக்கும் கருணாநிதியின் 97வது பிறந்த நாளான நாளை (ஜூன் 3) அனைத்து மாவட்ட-ஒன்றிய-நகர- பகுதி - வட்ட - பேரூர் - கிளைக் கழக நிர்வாகிகள் அவரவர் இடங்களிலேயே கருணாநிதியின் உருவ படத்திற்கும் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திட வேண்டுகிறேன்.


Advertisement

கொரோனா பரவலால், குறிப்பாக சென்னையில் கருணாநிதி பிறந்தநாளுக்கான எவ்வித ஆடம்பர நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம். கழகத் தலைவர் பொறுப்பில் உள்ள நான் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் நிகழ்விலும் யாரும் அணி திரண்டிட வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஏற்கெனவே அறிவித்தற்கிணங்க நலத்திட்ட உதவிகளை கழக நிர்வாகிகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அவரவர் இடங்களிலிருந்தே சமூக ஒழுங்கினைக் கடைப்பிடித்து, கருணாநிதிக்கு மரியாதை செலுத்தியும் உதவிகள் செய்தும் அவரின் புகழ் போற்றுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close