[X] Close

தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை

தமிழ்நாடு

rain-started-in-tamilnadu

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.


Advertisement

கேரளாவில் நேற்று முதல் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. குற்றால சீசனுக்கான அறிகுறி இன்று காலை முதல் தென்பட துவங்கியுள்ளது.


Advertisement

குமரி மாவட்டத்தில் விடிய விடிய கன மழை பெய்து வருகிறது. கோதையார், பேச்சிப்பாறை, குலசேகரம் உட்பட அனைத்து மலையோரப் பகுதிகளிலும் களியக்காவிளை, குழித்துறை, மார்த்தாண்டம், தக்கலை, நாகர்கோவில் உட்பட பல்வேறு பகுதிகளிலும் இரவு முதல் மழை பெய்து வருகிறது. மலையோரப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர், மாத்தூர், கந்தர்வகோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.


Advertisement

Advertisement
[X] Close