[X] Close

தமிழகத்தில் இன்று மட்டும் 1,162 கொரோனா உறுதி 

தமிழ்நாடு

Coronavirus-has-confirmed-1-162-people-in-Tamil-Nadu-alone-today
 
தமிழகத்தில் இன்று மட்டும் 1,162 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு 1,162 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  23,495 ஆக அதிகரித்துள்ளது. 
 
Image
 
அதேசமயம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 413 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 13,170 உயர்ந்துள்ளது.  இதனிடையே கொரோனாவால் இன்றும் ஒரே நாளில் மட்டும் 11 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை மொத்தம் 184 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.   இதில் உயிரிழப்பின் விகிதம் என்பது 0.78% ஆக உள்ளது.
 
Image
 
சென்னையில் மட்டும் இன்று 964 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்து 15,770  ஆக உயர்ந்துள்ளது.   
 
 

Advertisement

Advertisement
[X] Close