
(கோப்பு புகைப்படம்)
சென்னையில் இன்று இதுவரை கொரோனாத் தொற்றுக்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் கொரோனாத் தொற்று அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், 24 மணி நேரத்தில் 22 பேர் பலியாகினர். இதனால் சென்னை மக்களிடையே பெரும் அச்சம் நிலவி வந்தது. இதனையடுத்து நேற்றும் சென்னையில் 13 நபர்கள் உயிரிழந்தனர். அதிகபட்சமாக 804 நபர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியிருந்தது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் இதுவரை சென்னையில் 10 நபர்கள் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
ஓமந்தூரார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர், ஸ்டான்லி மருத்துவமனையில் 3 பேர், அப்போலோவில் ஒருவர், ராஜீவ்காந்தி, கேஎம்சியில் தலா ஒருவர் என 10 பேர் உயிரிழந்துள்ளனர்.